ADDED : மார் 15, 2015 01:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கண்ணை இமை காப்பது போல, கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என உறுதியுடன் நம்புங்கள்.
* கடவுள் கருணைக்கடலாக இருக்கிறார். துாய பக்தி இருந்தால் அவரின் அருளைப் பெற்று வாழலாம்.
* சொற்களைத் தேர்ந்தெடுத்து, யோசித்துப் பேசுங்கள். நாக்கின் ஆற்றலை முறையாகப் பயன்படுத்துங்கள்.
* கடவுள் இரு கைகளைக் கொடுத்திருக்கிறார். உழைத்து வாழ்ந்தால் யாரும் பட்டினி கிடக்கத் தேவையில்லை.
* லட்சியப் பயணத்தில் தடை குறுக்கிட்டாலும், துணிச்சலுடன் அதை எதிர்கொள்ளுங்கள்.
-சாய்பாபா