ADDED : ஜூன் 21, 2015 12:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எந்த வேலையில் ஈடுபட்டாலும், அதற்கு உரிய நேரத்திற்குள் செய்து முடியுங்கள்.
* வெறும் பேச்சோடு மட்டுமில்லாமல், நடத்தையாலும் உங்கள் செயல்பாடு உண்மையாக்கப்பட வேண்டும்.
* கடவுளை நம்புங்கள். பாவம் செய்ய அஞ்சுங்கள். இதுவே மேலான தொண்டு.
* முயற்சி நம் கையில். பலனோ கடவுளின் கையில்.
* வெறும் பூஜையில் ஈடுபடுவதோ, பஜனை செய்வதோ பக்தியல்ல. உயிர்களை நேசிப்பதே சிறந்த பக்தி.
* நம் உடல் கடவுள் கொடுத்த அன்புப் பரிசு. அதை அவருக்குரிய பணிகளுக்காக அர்ப்பணியுங்கள்.
-சாய்பாபா