ADDED : மார் 20, 2016 10:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுளை பூரணமாக நம்பினால் உணவு, உடை, ஆரோக்கியம் என குறைவின்றி மனம் நிறைந்த வாழ்வு கிடைக்கும்.
* உண்மை எது, உண்மையற்றது எது என்பதை கண்டறிந்து செயல்படுவதன் இன்னொரு பெயரே விவேகம்.
* பிறருடைய துன்பம் கண்டு இன்பம் கொள்வது பாவம். மறந்தும் கூட இதை எண்ண வேண்டாம்.
* பணம் இல்லாமல் உலகில் வாழவே முடியாது. ஆனால் பணத்திற்கு அடிமையாகி கஞ்சனாக கூடாது.
* மனதை தூய்மை மிக்கதாக வைத்திருப்பவனே நிம்மதியாக வாழ முடியும்.
-ஷீரடி பாபா