ADDED : ஜூன் 10, 2014 04:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுள் ஒரு செயலையும் செய்வதில்லை. ஆனால், அவனின்றி உலகில் ஓர் அணுவும் அசைவதில்லை.
* ஆசை எப்போது அற்றுப் போகிறதோ அப்போதே கடவுளின் அருளுக்குப் பாத்திரமாகி விட்டதை உணர முடியும்.
* எப்போதும் கடவுள் சிந்தனையில் மனம் லயித்து விட்டால், சுயநல எண்ணம் சிறிதும் உண்டாகாது.
* நேர்மையை ஒருபோதும் கைவிடாதீர்கள். அதுவே உலகம் முழுவதற்கும் அடிப்படை ஆதாரம்.
* உள்ளத்தில் பணிவு இருந்தால் மூவுலகையும் ஆளும் வலிமையைப் பெற முடியும்.
- சிவானந்தர்