ADDED : மே 12, 2009 06:44 PM

* நல்லநெறிமுறைகளில் இருந்து பிறழாதவனும், மக்களின் துன்பத்தை தன் துயரமாகக் கருதுபவனும், வீரம் நிறைந்தவனும், மானம் கொண்டவனுமாக இருப் பவனே நல்ல அரசன்.
* மக்களை ஆட்சி செய்யும் பொறுப்பில் உள்ளவர்கள் கடமையைச் செய்வதில் காலம் தாழ்த்தாதவராகவும், கல்வி அறிவு பெற்றவராகவும், நெஞ்சில் மிகத் துணிவுள்ளவ ராகவும் இருத்தல் வேண்டும்.
* பார்ப்பதற்கு எளியவனாகவும், மக்கள் அணுகும் விதத்திலும், கடுஞ்சொல் என்பதே அறியாதவனாகவும் இருக் கும் மன்னன் எவனோ அவனை மக்கள் போற்றுவர்.
* வருவாய்க்கான நல்ல அற வழிவகைகளை தோற்று விப்பவனும், அவ்வழிகளில் ஈட்டிய பொருளை காத்து மக்களுக்கு அறப்பணிகளைச் செய்பவனுமே நல்ல நிர்வாகியாவான்.
* ஆட்சியில் தவறு நடக்கும்போது இடித்துரைப்பதை ஏற்கும் பக்குவமும், பிறர் கூறும் கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையும் கொண்டு தன்னை திருத்திக் கொள்பவனின் கீழ் உலகமே அடங்கி நிற்கும்.