ADDED : மார் 11, 2016 12:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடமையை உணர்ந்து செயல்படு. காலமறிந்து பணியாற்று. உடலும் உள்ளமும் அமைதியில் திளைக்கும்.
* அனைத்தும் ஒன்று என்று அறிந்தவன் செய்யும் செயல்கள் அனைத்தும், அன்பின் வெளிப்பாடாக இருக்கும்.
* உணவில் எளிமை, உழைப்பில் நேர்மை, ஒழுக்கத்தில் உயர்வு இந்த மூன்றும் உத்தமர்களின் இயல்பு.
* ஆக்கப்பூர்வமான விஷயத்தில் அறிவைச் செலுத்து. ஊக்கமுடன் பாடுபடு. உயர்வு பெறுவது நிச்சயம்.
* உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக பேசுபவன், தனக்கு தானே பகைவனாகி அழிந்து விடுவான்.
-வேதாத்ரி மகரிஷி