ADDED : அக் 12, 2015 11:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*உலகில் பிறந்திருக்கும் நீங்கள், அதற்கு அடையாளமாக ஏதேனும் நல்ல விஷயத்தில் ஈடுபடுங்கள்.
* கோழைத்தனமும், கபட எண்ணமும் சிறிதும் வேண்டாம். உண்மையின் பாதையில் வீறுநடை போடுங்கள்.
*எதில் ஈடுபட்டாலும், அதை தன் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாற்றத் தெரிந்தவனே அறிவாளி.
* பெரிய செயல்களில் ஈடுபட்டு சாதிக்க விரும்பினால் குறிக்கோளும் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
* துன்பக் கலப்பற்ற இன்பமும், தீமையே இல்லாத நன்மையும் யாராலும் பெற முடியாதவை.
- விவேகானந்தர்