தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/தகவல்கள்/மறுமை நாள்

மறுமை நாள்

மறுமை நாள்


ADDED : ஜூன் 22, 2023 11:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2023 11:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* மறுமை நாள் வந்தே தீரும். அதில் சந்தேகம் இல்லை.

* ஒருவரின் பாவச்சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்.

* பிறருக்கு நல்லது நடக்க வேண்டும் என நினையுங்கள்.

* கொடுமையையும் அநீதியான செயல்களையும் யார் மன்னிக்கிறாரோ அவருக்கு கூடுதல் நன்மை உண்டு.

* அநீதி இழைக்கும் கொடுங்கோல் அரசனிடத்தில் சத்திய நெறியை கூறுவதே சிறந்த அறப்போர்.

* அளவு கடந்த மகிழ்ச்சியினால் சத்தியப்பாதையில் இருந்து விலகிவிட வேண்டாம்.

* கோபம் வரும்போது உணர்ச்சிவசப்பட்டுத் தகாத செயலில் இறங்கிவிடாதீர்கள்.

* தானியத்தை பதுக்கி வைப்பவனும் குற்றவாளி ஆவான்.

* பதவியில் இருக்கும்போது உங்களுக்கு உரிமையில்லாத பொருளை பயன்படுத்தாதீர்கள்.

* மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொள்கின்றனர்.

* பெற்றோரை சபிப்பது பெரும் பாவங்களில் ஒன்றாகும்.

* நோயையும் நரக வேதனையையும் தடுக்கும் கேடயமாக நோன்பு இருக்கிறது.

* சூரியன் சந்திரனைச் சென்றடைய முடியாது. இரவு பகலை முந்திவிட முடியாது. ஒவ்வொன்றும் தத்தமது மண்டலங்களில் நீந்தி கொண்டிருக்கின்றன.

* மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.

* ஒருவர் மகானாக வாழாவிட்டாலும் நல்ல பண்புள்ள மனிதனாகவாவது வாழ வேண்டும்.

-பொன்மொழிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us