நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்ரு இப்னுலைது என்னும் ஆட்சியாளர் ஒருமுறை நிரபராதியான இளைஞனுக்கு சிறைத் தண்டனை கொடுத்தார். மகனைக் காப்பாற்ற விரைந்தாள் அவனது தாய். குதிரையின் மீது கம்பீரமாக வந்த இப்னுலைது அப்பெண்ணைக் கண்டதும், ''யார் இவள்? ஏன் நிற்கிறாள்?'' எனக் கேட்டார்.
''சிறையில் வாடும் என் மகன் நல்லவன். அவனை விடுவிக்க உத்தரவிடுங்கள்'' என்று சொல்லி மனு கொடுத்தாள்.
அதை ஏற்காமல்'' சிறையில் கிடக்கும் இவளின் மகனுக்கு நுாறு கசையடி கொடுப்பதோடு ஊராருக்கு பாடம் புகட்டும் விதத்தில் வீதியில் இழுத்து செல்லுங்கள்'' எனத் தெரிவித்தார்.
''மனம் போன போக்கில் தண்டனை கொடுத்தால் நீதி என்னாவது?'' என அந்த தாய் கத்தியபடி மயங்கி விழுந்தாள். அதைக் கண்டதும் இப்னுலைது நீதியின் பாதையில் செல்ல முன்வந்தார். இளைஞனை விடுவிக்க உத்தரவிட்டார்.