
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருமுறை அபூஜஹீல் என்பவன் நபிகள் நாயகத்தைப் பார்த்து, ''உங்கள் முகம் அவலட்சணமாக இருக்கிறது'' எனக் கூறினான். அதற்கு அவர் அமைதியாக, 'ஆம்' என சொல்லி விட்டு புன்னகைத்தார். அப்போது அங்கு வந்த தோழரான அபூபக்கர், ''தங்கள் முகம் முழுநிலவு போல பிரகாசிக்கிறது'' என சொன்னார். இந்த புகழ் மொழிக்கும் அவர் மயங்காமல் 'ஆம்' என்றார். ஒருவர் இகழ்ந்தபோதும், புகழ்ந்தபோதும் அவரது முகத்தில் எந்த வித்தியாசமும் இல்லை.
இதை கவனித்த ஒருவர், 'இரண்டு பேருக்குமே இனிய முகத்தைக் காட்டினீர்களே எப்படி'' எனக் கேட்டார்.
''நான் ஒரு கண்ணாடி. அபூஜஹீல், அபூபக்கர் அவரவர் முகத்தை என்னில் பார்த்தனர்'' என்றார்.