இறைவனிடம் அதிகமாக பேசும் வாய்ப்பை பெற்றிருந்தார் திக்கித் திக்கிப் பேசும் இயல்புடைய மூஸா நபி. ஒருநாள் அவர், ''இறைவா! இந்த பூமியில் என் கண்களால் உன்னை பார்த்தே ஆக வேண்டும்'' என முறையிட்டார். ஒரு நாளில் குறிப்பிட்ட மலைக்கு வரும்படி ஆணை வந்தது. மலையின் நான்கு பக்கமும் ைஷத்தானிய சக்திகள் அப்புறப்படுத்தப்பட்டன.
மூஸா நபி அம்மலைக்கு வந்தபோது, 'ஒருபோதும் என்னை உம்மால் நேரில் காண முடியாது. இருப்பினும் இம்மலை இங்கேயே நிலைத்து நிற்குமானால் நிச்சயம் என்னைக் காண்பீர்' என்றது ஒரு குரல். சிறிது நேரத்தில் அம்மலை தவிடு பொடியாக மூஸா நபி மயங்கி விழுந்தார். பின் எழுந்தவர் தன் குற்றத்திற்காக மன்னிப்பு கேட்டார். பிறகு அந்த கரிந்துபோன கற்கள்தான் கண்களுக்கு ஒளியூட்டும் சுர்மா கற்களாக மாற்றப்பட்டன. இதை தேய்த்து கண்களில் பூசினால் பார்வை பிரகாசிக்கும். உடல் குளிர்ச்சி அடையும்.