
நபிகள் நாயகம் பள்ளிவாசலில் தொழும் முன்பு ஒளு (கை, கால், உடலை கழுவுதல்) செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது கையில் இருந்து வழிந்த நீரை சில தோழர்கள் பிடித்து தங்களின் உடம்பைக் கழுவினர். அவர்களிடம், ''ஏன் இப்படி செய்தீர்கள்'' எனக் கேட்டார்.
''உங்கள் மீது நாங்கள் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தவே செய்தோம்'' என்றனர். அதற்கு அவர், ''அன்பைக் காட்டும் வழி இதுவல்ல. என்னை மனப்பூர்வமாக நேசிக்கிறீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையிலே என்னைப் பின்பற்றுங்கள். எதை நான் விலக்குகிறேனோ அதை விலக்குங்கள். என் கொள்கைகளை ஏற்று நடந்து காட்டுங்கள். அதை விட்டு என்னை போற்றி புகழ்ந்துவிட்டு, என்னை முன்மாதிரியாகக் கொண்டு நடக்காத யாரும் என்னைப் பின்பற்றியவராக மாட்டீர்கள்'' என்றார்.
மேலும் அவர், ''உங்களில் எவரேனும் முகஸ்துதி (புகழ்ந்தால்) செய்வதைக் கண்டால் அவர்களின் முகத்தில் மண்ணை வாரி அடியுங்கள்'' என்றார்.