
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகத்தை பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றார் உமர். அப்போது அங்கு கண்ட விஷயங்கள் அவரை ஆச்சரியப்படுத்தின. வீட்டின் கூரை பேரீச்சை மரத்தின் இலைகளால் வேயப்பட்டிருந்தது. துாங்குவதற்கு பாயும், தண்ணீர் பாத்திரமும் இருந்தன. கயிற்றுக் கட்டிலில் அதன் தழும்புகள் முதுகில் பதியும்படி அவர் படுத்திருந்தார்.
''பலரும் ஆடம்பரமாக வாழும் போது, நீங்கள் மட்டும் எளிமையாக இருக்கிறீர்களே'' என வருந்தினார் உமர். ''இறைவன் எளிமையை விரும்புகிறான். எளிமையாக வாழ்பவர்கள் மறுமையில் பேரின்பம் பெற தகுதி பெறுகிறார்கள். மறுமையில் நான் நல்வாழ்வு பெறுவதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா'' எனக் கேட்டார்.