நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழுதியில் படுத்திருந்தது ஒரு கழுதை. அப்போது 'கிரீச்... கிரீச்...' என சத்தம் கேட்க, எங்கிருந்து ஒலி வருகிறது என எழுந்தது. வெட்டுக்கிளி ஒன்று
புல்லில் இருந்த பனித்துளியில் விளையாடிபடி சத்தமிட்டுக் கொண்டிருந்தது.
'உன் குரல் இனிமையாக இருக்கிறதே! உன்னைப் போல் இனிமையான குரலைப் பெற வழி சொல்லேன்' என்றது. வெட்டுக்கிளிக்குச் சிரிப்பு தாங்கவில்லை. பின் 'பனித்துளியைக் குடி. வேறு எதையும் சாப்பிடாதே' என்றது.
பனித்துளியை மட்டும் கழுதை குடிக்க தொடங்கியது. உடல் மெலிந்தது. பொதி சுமக்க முடியாமல் அவதிப்பட்டது.
ஆசைபட்டதால் நேர்ந்த ஆபத்தைப் பார்த்தீர்களா...