நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பத்தாம் வகுப்பு படிப்பவன் நசீர் தன் எதிர்பார்ப்பு நிறைவேறா விட்டால் கோபப்படுவான். பிறரிடம் பேச மாட்டான். சாப்பிட மாட்டான். பிறரையும் வருத்தி தன்னையும் வருத்திக் கொள்வான்.
இதை கவனித்த அவனது பாட்டி தெருவில் சென்ற கழுதையை காட்டி, ''அதோ முதுகில் துணிகளுடன் ஆற்றுக்குச் செல்லும் கழுதையைப் பார்'' என்றாள். 'கழுதைன்னா போகத்தான் செய்யும்'' எனச் சொல்லி விட்டு பள்ளிக்கு புறப்பட்டான்.
மாலையில் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் டீ குடித்தான். அப்போது வாசலுக்கு அழைத்துச் சென்ற பாட்டி, ''பார்த்தாயா... இப்போது வெளுத்த துணிகளுடன் இந்தக் கழுதை செல்கிறது. பொதியைச் சுமக்கும் இது அழுக்கு, வெளுப்பு என கவலைப்படவில்லை. அதனால் அதற்கு கோபம் வருவதில்லை. நீயும் உன் கடமையில் கண்ணாக இரு'' என்றாள்.