நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல்லா நலன்களையும் பெற்ற மனிதர் யாருமில்லை. உதாரணமாக ஒருவர் உயர்ந்த பதவியில் இருக்கிறார். அவருக்கு பல சலுகைகள் கிடைக்கின்றன என அவரைப் பார்ப்பவர்கள் ஏக்கம் கொள்கின்றனர். உண்மையில் உயர்பதவியில் இருப்பவருக்குத்தான் தெரியும் அவரது மனநிலை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை,
குறைகள் இருக்கும். அனைவருக்கும் உள்ள ஒரே ஆறுதல் தொழுகையே. இறைவனிடம் குறைகளை முறையிட்டால் கோரிக்கை நிறைவேற வாய்ப்புண்டு. நிறைவேறாவிட்டால் கூட அவனிடத்தில் ஒப்படைத்து விட்டோம்; அவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் ஏற்படும். இதனால் மனதில் நிம்மதியும், அமைதியும் நிலைக்கும்.
வணக்கங்களிலேயே தலைசிறந்தது தொழுகையே. தன் அடிமைத்தனத்தை உணர்ந்து படைத்தவனை எஜமானனாக ஏற்பதே வணக்கத்தின் முக்கிய அம்சம்.