நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் நபிகள் நாயகம். அப்போது அவரை சந்திக்க வந்த ஒரு நபர், ''அண்ணலாரே! என்னிடம் நான்கு கெட்ட குணங்கள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றை கைவிட நினைக்கிறேன். எதை முதலில் விடுவது'' என்றார்.
''பொய் பேசும் பழக்கம் இருந்தால் அதை கை விடு'' என்றார்.
அவரும் சம்மதித்தார். வீட்டுக்கு சென்ற அவர் வழக்கம் போல் இரவில் திருடுவதற்கு புறப்பட்டார். யாராவது எங்கே போகிறாய் என நம்மைக் கேட்டால் என்ன செய்வது? பொய் பேச மாட்டேன் என வாக்குறுதி அளித்து விட்டோமே என யோசித்தார். திருடச் செல்லாமல் வீட்டுக்குத் திரும்பினார். உழைத்து வாழலாம் என்ற எண்ணத்துடன் மறுநாளே வேலை தேடிப் புறப்பட்டார். பார்த்தீர்களா... பொய்யே தீமையின் வேர். அதை கைவிட்டால் எல்லா நன்மையும் உண்டாகும்.