
நபிகள் நாயகத்தை பார்க்க வந்த ஒருவர், ''எந்த தர்மம் அதிகளவு நற்கூலியைத் தரும்'' எனக் கேட்டார்.
''பிறருக்கு உதவி செய்யும் தகுதியுடன் இருக்கும் போது செய்கின்ற தர்மமே அதிகளவு நற்கூலி தரும்'' என்றார்.
அதாவது நன்றாக வாழும் போதே பிறருக்கு உதவி செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு இறக்கும் காலத்தில் செய்யும் தர்மத்தால் பலன் கிடைக்காது. சிறுவயது முதலே முடிந்தளவு தர்மச் செயல்களில் ஈடுபடுங்கள். இரண்டு வானவர்கள் தினமும் பூமிக்கு இறங்கி வருகிறார்கள். அதில் ஒருவர், 'தாராள மனம் கொண்ட அடியவர்களுக்கு நல்லதொரு பலனைக் கொடு' என்றும், மற்றொரு வானவர், 'குறுகிய மனம் கொண்ட கஞ்சர்களுக்கு அழிவைக் கொடு' என்றும் இறைவனிடம் வேண்டுவார்கள்.
வாழ்நாளை வீணாக கழிக்காதீர். ஏழைகளுக்காகவும், மார்க்கப் பணிக்காகவும் தர்மவழியில் செலவழியுங்கள். ஒருவேளை அடிப்படைத் தேவைக்கு மட்டும் உங்களிடம் பணம் இருக்கிறது என்றால் 'பிறர் நலமுடன் வாழ வேண்டும்' என நீங்கள் துஆ செய்தால் போதும்.