நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவுரைகளை மறைமுகமாகச் சொல்வதில் வல்லவர் நபிகள் நாயகம்.
தோழர்களிடம், 'இரண்டு ஒட்டகங்களை வாங்கி வர வேண்டும். யார் செல்கிறீர்கள்'' எனக் கேட்டார். ஒட்டகம் என்றால் அரேபியருக்கு விருப்பமான ஒன்று. அதனால் யாருக்குத் தான் ஆசை இருக்காது?
'இப்போதே செல்கிறோம்' என ஒரே குரலில் தெரிவித்தனர்.
''குர்ஆனில் இரண்டு வசனத்தை கற்றால்,
அது இரண்டு ஒட்டகம் வாங்குவதை விட மேலானது. மூன்று வசனத்தைக் கற்றால் அது
மூன்று ஒட்டகங்களை விடவும் மேலானது.
எனவே கல்வியை தேடி இப்போதே புறப்படுங்கள்'' என்றார்.