ADDED : செப் 12, 2025 07:53 AM

அ நிறம் | அளவு
ஒரு வியாபாரியின் உயிரை எடுக்க வந்த வானவர், ''நல்ல செயல் ஏதாவது நீங்கள் செய்திருக்கிறீர்களா'' எனக் கேட்டார்.
அதற்கு அவரோ, '' பணக்காரர்களிடம் கடனை வசூலிக்கும் போது போதுமான அவகாசம் கொடுப்பதோடு கறாராகவும் இருப்பேன். ஆனால் ஏழைகளுக்கு கால அவகாசம் தருவதோடு, சிலருக்கு கடனை தள்ளுபடியும் செய்திருக்கிறேன்'' என்றார்.
' என் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டாம். உத்தரவின்றி உள்ளே வரலாம்' என சொர்க்கத்திற்கு செல்லும் வழியைக் காட்டினார் வானவர்.
