மெதீனா மக்களிடம் நபிகள் நாயகம், '' உயிர் போன பிறகு இறைவன் முன் நிற்க வேண்டி வரும்.
அப்போது அவன், 'நான் நோயுற்று இருந்த போது என்னை ஏன் பார்க்கவில்லை? பசியால் உணவு கேட்ட போதும் தரவில்லையே ஏன்? தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டேன். அதுவும் கூட தரவில்லை' எனக் கேட்பான். அதற்கு என்ன பதில் தயார் செய்து வைத்திருக்கிறீர்கள்'' என்றார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ''என்னிடம் இப்படி கேட்டால் பசியோ, நோயோ உன்னை தாக்காதே... அப்படியிருக்க கேள்வி கேட்பது முறையாகுமா எனக் கேட்பேன்'' என்றார்.
''நீங்கள் அப்படி கேட்டால், அவன் ஒரு குறிப்பிட்ட மனிதரின் பெயரைச் சொல்லி, அவருக்கு ஏன் உணவு, தண்ணீர் தரவில்லை? இவர் நோயுற்ற போது ஏன் நீ ஆறுதல் சொல்லவில்லை? என கேட்பானே. அப்படி செய்திருந்தால், அவர்களின் வடிவில் என்னை பார்த்திருக்கலாமே என்பான். அதற்கு என்ன பதில் சொல்வீர்'' என்றதும் அந்த நபர் வாயடைத்து நின்றார்.
''எல்லோரையும் சகோதரர்களாகக் கருதி உதவி செய்யுங்கள். பிறருக்கு உதவினால் அது அவனுக்கே உதவியது போல'' என்றார் நாயகம்.

