நண்பர்களான ரஹீம், ஹஸன் ஆகியோர் அரசு அலுவலகத்தில் பணி செய்தனர். இவர்களில் ரஹீம் ஆடம்பர பிரியன். இஷ்டத்திற்கு செலவு செய்து சம்பள பணத்தை பத்தே நாளில் கரைத்து விடுவான். கடன் வாங்கி கார் வாங்கினான். இதனால் லஞ்சம் வாங்க ஆரம்பித்தான்.
ஒரு கட்டத்தில் அவனது மனம் தவித்தது. எளிமையாக வாழ்ந்த ஹஸனின் நடவடிக்கைளை கவனித்தான். அவன் எப்போதும் போல அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்தான். வேலையில் மனச்சோர்வின்றி ஈடுபட்டான். வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை ரசித்து சாப்பிட்டான். சக ஊழியர்களிடம் சந்தோஷமாக பேசி சிரித்தான். அவனிடம் சென்று, '' ஹஸன்... உன் பக்கம் மட்டும் சந்தோஷச் சாரல் அடிக்குதே எப்படி'' எனக் கேட்டான்.
''என்ன திடீர் சந்தேகம்''
''இல்லடா... சும்மா கேட்டேன்''
''நீ கேட்கிறது சரிதான். என் வேலையை சரிவர செய்றேன். விடுமுறை நாளில் குடும்பத்தோட பொழுது போக்குறேன். மார்க்கம் சொல்ற நெறிமுறையை பின்பற்றுகிறேன். என் வருமானத்திற்கு ஏற்ப மனைவியும் சிக்கனமாக இருக்கா...'' என்றான் ஹஸன்.
தவறை உணர்ந்த ரஹீம் திருந்தி வாழ முடிவு செய்தான்.

