
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸெய்யதுனா ஈஸாவிடம், ''எப்போதும் நடந்து செல்கிறீர்களே... வாகனம் இருந்தால் நன்றாக இருக்குமே'' எனக் கேட்டார் சீடர் ஒருவர்.
''என்னிடம் வாகனம் வாங்க வசதி இல்லை'' என்றார் ஸெய்யதுனா. கழுதை ஒன்றை விலைக்கு வாங்கி அன்பளிப்பாக கொடுத்தார் சீடர். அதிலே ஏறி சென்ற ஸெய்யதுனா தன் பணிகளில் ஈடுபட்டார். இரவானதும் கழுதைக்கு தீனி போடுவது பற்றிய கவலை அவருக்கு ஏற்பட்டது.
மறுநாளே கழுதையை அவரிடம் ஒப்படைத்து விட்டு, ''இறைவன் மீதுள்ள கவனத்தை திசை திருப்பும் எந்த விஷயமும் எனக்கு தேவையில்லை'' என்றார்.

