நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாப்பாட்டு பிரியரான தாவூத் வீட்டில் இறைச்சி சாப்பிட்டு நீண்ட நாளாகி விட்டது. திடீரென ஒருநாள் அவரது மனைவி இறைச்சி சமைத்து வைத்தார். வேலைக்குச் சென்று வந்த தாவூத் பசியுடன் சாப்பிட அமர்ந்த போது, ''நம் தெருவில் இருக்கும் அனாதை இல்லக் குழந்தைகள் இந்நேரம் சாப்பிட்டு இருப்பார்களா'' எனக் கேட்டார்.
''சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை. இதை கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள்'' என்றாள் மனைவி.
''அப்படியானால் நான் போய் கொடுக்கிறேன். அவர்கள் சாப்பிட்டால் இறைவனிடம் போய்ச் சேரும். நாம் சாப்பிட்டால் மண்ணோடுதான் சேரும்'' எனப் புறப்பட்டார். அனாதைக் குழந்தைகள் ஆசையுடன் சாப்பிடுவதை பார்த்து மகிழ்ந்தார் தாவூத்.

