தர்மசிந்தனை கொண்டவர் உஸ்மான். ஒருமுறை ஊரெங்கும் பஞ்சம் ஏற்பட்டது. ஆனாலும் ஊரின் நடுவில் வசித்து வந்த யூதர் வீட்டுக்கிணறு மட்டும் வற்றவில்லை. ஆனால் அவரோ இப்போது சம்பாதித்தால் உண்டு என்ற வைராக்கியத்தில் அதிக லாபத்திற்கு தண்ணீரை விற்றார்.
இதை அறிந்ததும் மக்களுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்க விரும்பினார் உஸ்மான். அதற்காக அவரது கிணறை விலைக்கு கேட்டார். அவரோ தர மறுத்து விட்டார்.
''பாதி கிணற்றை விலைக்கு தாருங்கள். ஒருநாள் நீங்கள், மறுநாள் நான் என மாறி மாறி தண்ணீரை எடுத்துக் கொள்வோம்'' எனச் சொன்னார் உஸ்மான். அதன்படி கிணறை விற்றார் யூதர். தனக்குரிய நாளில் இலவசமாக தண்ணீரை கொடுத்தார் உஸ்மான். மக்களோ இரண்டு நாள் தேவைக்கான தண்ணீரை ஒரே நாளில் எடுத்துச் சென்றனர். இதனால் யூதரிடம் தண்ணீர் வாங்க யாரும் வரவில்லை.
வேறு வழியின்றி தன் பங்கு கிணற்றை உஸ்மானிடம் விற்றார். தர்மம் செய்; மக்கள் மனதில் இருப்பாய்.

