நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயிஷாவிற்கும், நபிகள் நாயகத்திற்கும் இடையே ஒருமுறை வாக்குவாதம் வந்தது. குரலை உயர்த்திப் பேசினார் ஆயிஷா. அப்போது வீட்டிற்குள் நுழைந்த ஆயிஷாவின் தந்தை அபூபக்கர் அதைக் கேட்டு விட்டார். கோபத்துடன் மகளை அடிக்க ஓடி வந்தார். நாயகம் அவரை தடுத்து சமாதானம் செய்தார்.
அப்போது கணவரின் முன் தான் கேவலப்பட்டு நிற்பதை உணர்ந்தார் ஆயிஷா.
உடனே நாயகம், ''முன்பு ஒருமுறை நீங்கள் இருவரும் சண்டையிட்ட போது நான் இடையே புகுந்து தடுத்தது ஞாபகமிருக்கா...'' எனக் கேட்டுச் சிரித்தார்.
குடும்பத்தில் சண்டை வந்தால் அதை தடுப்பதும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பதுமே நிம்மதிக்கான வழி.

