துருக்கி மன்னரும், முல்லாவும், அரண்மனை சமையல்காரரும் வீரர்களுடன் காட்டுக்குச் சென்றனர். மதிய உணவை தயார் செய்ய ஆரம்பித்தார் சமையல்காரர். அப்போது அவர், உப்பு கொண்டு வரவில்லை என்பதை அறிந்தார்.
தயங்கியபடியே மன்னரிடம் அவர் சொன்ன போது, ''அதனால் என்ன? பக்கத்தில் எங்காவது உப்பு கிடைத்தால் வாங்கி வா'' என்றார். அருகில் இருந்த முல்லா, ''பொற்காசு கொடுங்கள் மன்னா. அப்போது தானே உப்பு தருவார்கள்'' என்றார். ''ஏன் பொற்காசு தர வேண்டும். உப்பைக் கூடவா தர மாட்டார்கள்'' என்றார் மன்னர்.
''சாதாரண உப்பைக் கூட இலவசமாக மன்னர் கேட்கிறாரே என நினைப்பார்கள்'' என்றார் முல்லா. ''சரியான நேரத்தில் எனக்கு சொன்னீர். எதையும் இலவசமாக பெறக் கூடாது'' என உணர்த்திய முல்லாவுக்கு நன்றி சொன்னார் மன்னர். உப்பு வாங்க பொற்காசுகளை கொடுத்து அனுப்பினார். இலவசம் வாங்குவது இழுக்கு.

