ADDED : ஜன 02, 2026 08:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகளின் திருமணத்துக்காக சேர்த்த பணத்தை, உறவினரிடம் கொடுத்து வைத்தார் மாலிக். ஆனால் அவரோ பேராசையால் பணத்தை, 'எப்போது கொடுத்தீர்கள்' எனக்கேட்டுவிட்டார். பாவம். மாலிக்கின் மனம் என்ன பாடுபட்டிருக்கும். ஆனாலும் போராடி அந்தப் பணத்தை வாங்கிவிட்டார். ஒருவேளை அந்தப் பெண்ணின் திருமணம் தடைபட்டால் குடும்பம் என்னவாகும்? ஒருவரது நம்பிக்கையை பாழாக்குவது பெரிய பாவமாகும். எனவே
நம்பிக்கையுடன் யார் எந்த பொருளைக் கொடுத்தாலும் அதை சரியான நேரத்தில் திருப்பிக் கொடுப்பது அவசியம்.

