
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோழர் ஒருவர் நபிகள் நாயகத்திடம், ''நஸீகத் என்றால் என்ன'' எனக் கேட்டார். அதற்கு, ''உண்மையுடன் இருப்பதும், மற்றவர் நலனில் அக்கறை கொள்வதும் ஆகும்'' என்றார் நபிகள் நாயகம்.
அதற்கு தோழர்கள், '' யார் விஷயத்தில் நாங்கள் உண்மையுடன் இருக்க வேண்டும்'' எனக் கேட்டனர்.
''இறைவனுக்கும், அவனுடைய துாதருக்கும், அவனுடைய திருமறைக்கும், மக்களுக்கும் உண்மையாகவும், அவர்களின் நலனில் அக்கறையும் கொண்டிருக்க வேண்டும்'' என்றார்.
'நஸீஹத்' என்பது அரபுச்சொல். மோசடி, நம்பிக்கை துரோகம், போலி, கலப்பு ஆகியவற்றுக்கு எதிரானது இது. அவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும் என இச்சொல் உணர்த்துகிறது.

