
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஞானி ஒருவரைச் சந்திக்க ஒட்டகத்தில் புறப்பட்டான் மாலிக். நீண்ட துாரம் பயணம் செய்து அவர் இருக்கும் இடத்தை அடைந்தான். ஒட்டகத்தை விட்டு இறங்கியதும், அதைக் கட்டி வைக்கவில்லை.
''எல்லா உயிர்களையும் காப்பாற்றுவது ஒருவனே. அதனால் தான் என் ஒட்டகத்தை கட்டி வைக்கவில்லை'' என்றான்.
''உன் நம்பிக்கையை பாராட்டுகிறேன். ஆனால் நீ செய்தது தவறு. தனக்குரிய கடமையை ஒருவர் செய்வதையே அவன் விரும்புவான். இப்போது பார். நீ ஒட்டகத்தை கட்டிவைக்கவில்லை. அது மற்றவருக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். சிந்தித்து செயல்படு'' என அறிவுறுத்தினார் ஞானி.

