ADDED : ஜன 28, 2026 01:35 PM

அ நிறம் | அளவு
இசை ஆசிரியர் ஒருவரைச் சந்தித்த முல்லா, ''இசை என்றால் எனக்கு பிடிக்கும். கற்றுக் கொடுப்பீரா'' எனக் கேட்டார்.
''அப்படியா... தாராளமாக''
''பயிற்சிக்கு எவ்வளவு பணம் வேண்டும்''
''முதல் மாதம் 100 பொற்காசுகள்; அடுத்த மாதம் 90; இப்படி மாதம் தோறும் 10 பொற்காசுகளை குறைத்துக் கொள்ளலாம்'' என்றார்.
''அப்படியா... பத்து மாதம் கழிந்த பிறகு வருகிறேன்'' என்றார் முல்லா.
''இசை பிடிக்கும் எனச் சொன்னீர்களே...'' என இழுத்தார் ஆசிரியர்.
''ஒன்றும் இல்லை. இப்போது கற்றுக் கொண்டால் பொற்காசு தேவைப்படும். பத்து மாசம் கழிந்தால் பணம் வேண்டாமே'' எனச் சிரித்தார் முல்லா.
