நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருசமயம் நபிகள் நாயகத்தை கொல்ல எதிரிகள் திட்டம் தீட்டினர். இதையறிந்த
அவர் மெக்காவில் இருந்து மெதீனாவுக்கு சென்றார். அவரைக் கண்டுபிடிப்பவருக்கு நுாறு ஒட்டகம் பரிசு என அறிவித்தனர். அதை அடைய எண்ணிய சுராக்கா என்பவன், குதிரையுடன் புறப்பட்டான்.
அவர் தங்கியுள்ள இடத்தை கண்டுபிடித்தான். சுராக்காவைக் கண்டதும் தோழர் அபூபக்கர் பதட்டப்பட்டார். உடனே, ''பயப்படாதீர்கள். இறைவன் நம்முடன் இருக்கிறான்'' என்றார் நம்பிக்கையுடன். அதன்பின் இருவரும் தொழுகையில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் சுராக்காவின் குதிரை ஓரடி கூட எடுத்து வைக்க முடியாமல் திணறியது. சுராக்காவும் என்ன செய்வது என தெரியாமல் தவித்தார். இதைக் கண்ட நாயகம் பெருந்தன்மையுடன் உதவ முன் வந்தார். காட்டிக் கொடுக்க வந்த எதிரியான தனக்கும் உதவுகிறாரே இவர் என சுரக்கா மனம் நெகிழ்ந்தான்.

