நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளைஞன் ஆபித் காலையில் ஜாகிங் சென்றான். அவனுக்கு பின்னால் ஜாகிங் வந்த ஒருவர் வேகமாக அவனை முந்தினார். உடனே ஆபித் ஓட ஆரம்பித்தான். ஒருகட்டத்தில் அவரை முந்தினான்.
அலட்சியத்துடன் பின்னால் திரும்பிய போது, அவர் வேறொரு தெருவில் போய் விட்டார். அப்போதுதான் தன்னுடன் அவர் போட்டிக்கு வரவில்லை என்ற உண்மையை உணர்ந்தான்.
ஆபித் போலவே நம்மில் பலர் இருக்கிறோம். உறவினர், அண்டைவீட்டார், நண்பர் என பலரையும் போட்டியாக கருதுகிறோம். இதற்காக பணம், பொருள், நேரம் என அனைத்தையும் வீணாக்குகிறோம். இதனால் யாருக்கும் பயன் கிடைக்காது. இனியாவது மனம் திருந்தி வாழ்வோம். யாரையும் போட்டியாக நினைக்க வேண்டாம்.

