தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/நல்ல பெற்றோர்

நல்ல பெற்றோர்

நல்ல பெற்றோர்


ADDED : பிப் 12, 2026 11:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 11:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இப்னு அபிவக்காஸ் உடல்நலமின்றி இருந்தார். அவரை சந்திக்க சென்றார் நபிகள் நாயகம். அவரிடம் , ''இறைத்துாதரே... என் நிலையை பார்த்தீர்களா... நோயால் சிரமப்படும் இந்த நேரத்தில் நான் முக்கிய முடிவு எடுக்க வேண்டியுள்ளது. என்னிடம் சொத்து அதிகம் உள்ளது. என்னுடைய வாரிசு மகள் மட்டுமே. சொத்தில் ஒரு பங்கை மகளுக்கும், இரண்டு பங்கை தர்மத்திற்கும் கொடுக்க விரும்புகிறேன்'' என்றார்.

''வேண்டாம்'' என்றார் நபிகள்.

''சரி. பாதியாவது தர்மம் செய்யலாமா''

''வேண்டாம்''

''மூன்றில் ஒரு பாகத்தையாவது கொடுக்கலாமா''

''சரி. கொடுங்கள். ஆனால் அதுவும் அதிகமே. வாரிசுகளை மற்றவர்களிடம் கை ஏந்தும் நிலையில் விட்டுச் செல்லக் கூடாது. பொருளாதாரத்தில் நிறைவான நிலையில் வாழச் செய்பவரே நல்ல பெற்றோர்'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us