தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/உடனே புறப்படு

உடனே புறப்படு

உடனே புறப்படு


ADDED : பிப் 26, 2026 12:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 12:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நபிகள் நாயகத்தை சந்தித்த இளைஞன் ஒருவன், ''அறப்போருக்கு செல்லும் படையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்'' எனக் கேட்டான்.

''உன் பெற்றோர் இருக்கிறார்களா?''எனக் கேட்டார்.

''ஆம். இருக்கிறார்கள்''

''அவர்களுக்கு உதவி செய். அவர்களின் மனம் குளிரட்டும். இதனால் அவன் அருள் கிடைக்கும்'' என அனுப்பி வைத்தார்.

சிறிது நேரத்தில் மற்றொரு இளைஞன் வந்தான். அவனும் தன்னை படையில் சேர்க்கும்படி வேண்டினான். அவனிடம் நாயகம், ''பெற்றோர் உன்னை அனுமதித்தார்களா'' எனக் கேட்டார்.

''எனது தாயார் அழுது கொண்டே இருந்தார். அதைப் பொருட்படுத்தாமல் நான் வந்து விட்டேன்'' என்றான்.

''வீட்டுக்கு உடனே புறப்படு. தாயாரை அழ வைக்காதே. பெற்றோரின் மகிழ்ச்சியில்தான் இறைவனின் மகிழ்ச்சி இருக்கிறது'' என அனுப்பி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us