ADDED : மார் 05, 2026 08:55 AM
ஆட்சியாளர் உமர் மக்களுக்கு சேவை செய்வதை பாக்கியமாக கருதினார். இவரது மனைவி பாத்திமாவிடம் அவரது தந்தை அன்பளிப்பாக கொடுத்த முத்துமாலை ஒன்று இருந்தது.
இதைக் கண்ட உமர், ''விலை உயர்ந்த உன் முத்து மாலையை அரசு கருவூலத்தில் சேர்த்து விடுவாயா... அந்த பணத்தில் மக்களுக்கு சேவை செய்யலாம்'' என்றார்.
''மக்களின் சேவைக்காகவும் எதையும் தரத் தயாராக இருக்கிறேன்'' என்றார் பாத்திமா.
ஒருநாள் அமைச்சர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் உமர். மதியத்தில் எல்லோரும் சாப்பிடத் தயாராயினர். சிறிது நேரத்தில் சில ரொட்டித்துண்டுகள் தரப்பட்டன.
சாப்பாடுக்காக காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. அவர்கள் உமரின் முகத்தை பார்த்தனர்.
''மக்களின் வரிப்பணத்தில்தான் ஆட்சி நடக்கிறது. தேவையின்றி அதை செலவு செய்யக் கூடாது'' என்றார் உமர். ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக வாழ்ந்தார் உமர்.

