sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

அப்பாவியா இருக்கியே...

/

அப்பாவியா இருக்கியே...

அப்பாவியா இருக்கியே...

அப்பாவியா இருக்கியே...


ADDED : மார் 05, 2026 09:00 AM

Google News

ADDED : மார் 05, 2026 09:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூடையை சுமந்தபடி மெக்காவை விட்டு புறப்பட்டாள் ஒரு மூதாட்டி. மதியம் வந்தது.

மூதாட்டி தளர்ந்த நடையுடன் செல்வதைக் கண்ட நபிகள் நாயகம், ''அம்மா... வெயில் தாழ்ந்த பிறகு போகக் கூடாதா... ஏன் கஷ்டப்படுகிறீர்கள். எங்கு போக வேண்டும் என சொல்லுங்கள். நான் சுமந்து வருகிறேன்'' என்றார்.

உதவி செய்பவர் யார் என்பதை அறியாத அவள், ''மெக்கா நகரில் முகம்மது என ஒருவர் இருக்கிறார். அவருடைய உபதேசத்தைக் கேட்டு வாழ வேண்டும் என்கின்றனர் மக்கள். யஹூதி இனத்தைச் சேர்ந்த நான் இதை ஏற்கவில்லை. அதனால் ஊரே விட்டே வெளியேறுகிறேன்'' என்றாள்.

ஏதும் பேசாமல் அவள் சொன்ன இடம் வரை மூடையை சுமந்தார்.

சில திர்ஹம் நாணயங்களை கூலியாக கொடுத்தாள் மூதாட்டி.

''வேண்டாம். பணத்திற்காக சுமக்கவில்லை. வயதான காலத்தில் சிரமப்படுகிறீர்களே... என்றே சுமந்தேன்'' என்றார் பணிவுடன்.

''அயோக்கியர்கள் வாழும் இந்தக் காலத்தில் இப்படி அப்பாவியா இருக்கியே... உம் பேரு என்னப்பா'' எனக் கேட்டாள் மூதாட்டி. சிரித்துக் கொண்டே, ''யாருக்காக ஊரை விட்டு வெளியேறுகிறீர்களோ... அந்த முகம்மது நான்தான்'' என்றார். வாயடைத்துப் போனாள் அந்த மூதாட்டி.






      Dinamalar
      Follow us