
அறிவியல் ஆசிரியர் அப்துல்லா பாடம் நடத்தினார். இறுதியாக அவர், ''இவ்வளவு நேரமா குவி, குழி ஆடிகள் பற்றி தெரிந்து கொண்டீர்கள். இப்போ கண்ணாடி பற்றிய இன்னொரு பாடத்தையும் தெரிஞ்சுக்கப் போறோம்'' என்றார்.
''நாம் ஒவ்வொருவரும் கண்ணாடி போல இருக்க வேண்டும். பிறருடைய குறைகளை எப்படி சுட்டிக் காட்ட வேண்டும் என்பதை கண்ணாடி சொல்கிறது'' என புதிர் போட்டார் ஆசிரியர்.
''எப்படி சார்'' எனக் கேட்டான் மாணவன் ஹாருன்.
''நம் முகத்தில் அழுக்கோ, காயமோ இருந்தால் அப்படியே கண்ணாடியில் தெரியும். அது போல பிறருடைய குறை எந்தளவுக்கு உள்ளதோ, அந்தளவுக்கே எடுத்துச் சொல்ல வேண்டும். துரும்பைத் துாணாக்க கூடாது. கண்ணாடி முன் நின்றால் மட்டுமே அது உன்னைக் காட்டும். நீ விலகி விட்டால் தெரியமாட்டாய். அதுபோல் ஒருவர் இருக்கும் போது தான் குறை சொல்ல வேண்டும். இல்லாத போது பேசுவது சரியல்ல. கண்ணாடி முன்னாடி நிற்கும் போதெல்லாம் இதை நினைத்துப் பார்'' என்றார்.

