தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/வல்லவனுக்கு வல்லவன்

வல்லவனுக்கு வல்லவன்

வல்லவனுக்கு வல்லவன்


ADDED : மார் 26, 2026 12:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 12:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நல்ல மனம் கொண்ட பணக்காரர் ஒருவருக்கு தான் ஒரு அதிபுத்திசாலி என்ற எண்ணமும் இருந்தது. அவரை திருத்த எண்ணிய முல்லா, ''எனக்கு தெரிந்தவர் கடன் பிரச்னையால் அவதிப்படுகிறார். உங்களால் உதவ முடியுமா'' எனக் கேட்டார்.

''சரி. செய்கிறேன். அவர் யார்?''

''வேறு யாருமில்லை. நான்தான்''என்றார்.

முல்லாவின் சாமர்த்தியமான பேச்சை ரசித்த பணக்காரர் பணம் கொடுத்தார். மூன்று மாதம் முடிந்தது. பணத்தை தரவில்லை.

மீண்டும் ஒருமுறை பணக்காரரிடம் வந்தார் முல்லா. ''எனக்கு தெரிந்த ஒருவர்...'' என பழைய பல்லவியை பாடினார். சுதாரித்துக் கொண்ட பணக்காரர், ''என்னை பார்த்தால் பைத்தியக்காரனைப் போல தெரிகிறதா... இனி உன்னிடம் ஏமாற மாட்டேன்'' எனக் கோபப்பட்டார்.

''நீங்கள் இப்படி சொல்வீர்கள் எனத் தெரிந்தே கடன்பட்ட நபரை அழைத்து வந்திருக்கிறேன்'' என வெளியே இருந்த ஒருவரை அழைத்தார்.

அவரும் வந்தார்.

''உண்மையாகவே கடனால் சிரமப்படுகிறீரா'' எனக் கேட்டார் பணக்காரர்.

''ஆம்'' என்றார் அவர்.

பணக்காரரும் அவருக்கு பணம் கொடுக்க முன் வந்தார். அப்போது அதை பெற கையை நீட்டினார் முல்லா.

''நீ ஏன் கையை நீட்டுகிறாய்'' என கோபப்பட்டார் பணக்காரர்.

''உண்மையில் கடன்பட்டவர் அவர் தான். அவருக்கு கடன் கொடுத்தவன் நானாச்சே. பணத்தை நான் பெறுவது தானே முறை'' என்றார் முல்லா. வேறு வழியின்றி இரண்டாவது முறையும் பணம் கொடுத்தார் பணக்காரர். முல்லாவின் சாமர்த்தியமான பேச்சைக் கேட்டு, 'வல்லவனுக்கு வல்லவனாக இருக்கிறாரே இவர்' என உணர்ந்தார் அந்த பணக்காரர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us