தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/ஜாக்கிரதை

ஜாக்கிரதை

ஜாக்கிரதை


ADDED : ஏப் 02, 2026 10:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 10:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அது ஒரு மாலை நேரம். ஆற்றங்கரையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான் அப்துல். அப்போது ஆற்றில் கருப்பு போர்வை ஒன்று மிதந்து வந்தது. பார்க்க புதியதாக இருக்கிறதே என எண்ணிய அப்துல் அதை எடுக்க தண்ணீரில் குதித்தான். வேகமாக நீந்திச் சென்று அதை பிடித்தான். சற்று நேரத்தில் அது அவனை சுற்றிக் கொண்டது. தன் நண்பர்களை நோக்கி, 'என்னைக் காப்பாற்றுங்கள்' என அலறினான்.

கரையில் இருந்த நண்பர்கள், 'போனால் போகட்டும். போர்வையை விட்டு கரையேறு' என்றனர். 'நான் அதை விட்டு நீண்ட நேரமாகி விட்டது. அதுதான் என்னை விடமாட்டேன் என்கிறது' என்றான். உற்று கவனித்த போது தான் அது போர்வை இல்லை; உயிருள்ள கரடி என அவர்களுக்கு புரிந்தது.கெட்ட பழக்கங்களும் இந்தக் கரடி போலவே... ஏதோ ஒரு சூழலில் தீயவற்றை பழக ஆரம்பிக்கிறான் மனிதன். ஒரு கட்டத்தில் அதில் இருந்த வெளிவர நினைத்தாலும் அந்த பழக்கம் அவனை விடுவதில்லை. கெட்ட விஷயங்களின் அருகே செல்லாதீர் ஜாக்கிரதை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us