ADDED : ஏப் 15, 2026 09:17 AM
அ நிறம் | அளவு
ஒருமுறை தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்த நபிகள் நாயகம், ''இரும்பின் மீது தண்ணீர் பட்டால் துரு பிடிக்கும். அதுபோல் கெட்ட எண்ணம் உனக்குள் நுழைந்தால் இதயத்தில் துரு பிடிக்கும்'' என்றார்.
உடனே தோழர் ஒருவர், ''துருவை எப்படி போக்குவது'' எனக் கேட்டார்.
''மரணம் பற்றி அடிக்கடி சிந்திப்பதும், குர்ஆனை ஓதுவதும் அதற்கான வழிகள். இதனால் மற்றவருக்கு தீங்கு செய்யும் எண்ணம் மறையும். அப்போது மனம், உடல் என எல்லாம் நலம் பெறும்'' என பதிலளித்தார்.
