ADDED : ஏப் 15, 2026 09:18 AM
அ நிறம் | அளவு
கழுதைகள் சில குளத்தில் தண்ணீர் பருகின. அப்போது அமைதியாக ஓநாய் ஒன்று அவற்றை நெருங்கியது. அதை பார்த்த கழுதைகள் ஓட்டமாக ஓடின. ஆனால் காலில் அடிப்பட்ட ஒரு கழுதை மட்டும் ஓநாயிடம் சிக்கியது. ஓநாயை பார்த்து, 'என் காலில் முள் குத்தியுள்ளது. என்னை நீ சாப்பிட்டால் உன் தொண்டையில் முள் குத்தும்' என்றது கழுதை.
'எங்கே உன் காலைக் காட்டு' என்றது ஓநாய். முழு பலத்தை காட்டி ஓநாயை உதைத்தது கழுதை. வலி தாங்காமல் அலறியது. புத்திசாலியாக இருந்தால் ஆபத்திலும் தப்பிக்கலாம்.
