ADDED : ஏப் 23, 2026 12:17 PM
அ நிறம் | அளவு
ஆட்சியாளர் ஒருவர் மதிய உணவை சாப்பிட்டதும் துாங்கினார். அவருக்கு விசிறி வீசினார் பணியாளர். உண்ட மயக்கத்தால் பணியாளர் தடுமாறினார். ஆட்சியாளரின் மூக்கில் விசிறி இடித்தது. ஓலை விசிறி என்பதால் மூக்கில் கீறல் ஏற்பட்டது.
''முட்டாளே! இப்படியா... வீசுவாய்'' எனக் கத்தினார் ஆட்சியாளர்.
''மன்னியுங்கள். உண்ட மயக்கத்தில் தவறு நடந்து விட்டது'' என்றான்.
''உன்னை என்ன செய்கிறேன் பார்'' என அடிக்க கையைத் துாக்கினார். அப்போது சட்டென்று, 'நம்மைப் போலத்தானே பணியாளரும். சாப்பிட்டதும் துாக்கம் வருவது இயல்புதானே...' என எண்ணி மன்னித்தார்.
கோபம் வருவது இயற்கையே. ஆனால் வந்த வேகத்தில் மறைய வேண்டும். அதுவே நல்லவரின் அடையாளம்.
