தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/கிண்டல்

கிண்டல்

கிண்டல்


ADDED : ஏப் 29, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 05:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினார் பணக்காரர் ஒருவர், ஊரிலுள்ள பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். முல்லாவும் அங்கு வந்திருந்தார். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தற்பெருமையுடன் பேசிக் கொண்டனர். அதைக் கேட்க சகிக்காமல், 'நேற்று நான் செய்த செயலைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்' என்றார் வேகமாக.

'அப்படி என்ன செய்தீர்கள்' எனக் கேட்டார் ஒருவர்.

'நள்ளிரவில் நான் தனியாக சென்ற போது திடீரென கொள்ளையர்கள் வந்து விட்டனர்.

ஆனால் அவர்களின் கண்ணுல விரலை விட்டு ஆட்டிட்டேன். கடைசியில் என் பின்னாலே அவங்க ஓடி வந்தாங்க பாவம்' என்றார்.

'பரவாயில்லையே... தனி ஆளா சமாளிக்கிறதுன்னா சும்மாவா? அவங்களை எப்படி உங்க வழிக்கு கொண்டு வந்தீங்க' எனக் கேட்டனர்.

'அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அவர்களை பார்த்ததும் கண்ணை மூடிக்கிட்டேன். எடுத்தேன் பாரு ஓட்டம். திரும்பிக் கூட பார்க்கலை. இது போலத்தான் இருக்கு நீங்க பேசுற தற்பெருமைப் பேச்சு” என்றார் கிண்டலாக. அவர்கள் கப்சிப் ஆயினர். அவர்களின் முகத்தில் ஈயாடவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us