ADDED : மே 07, 2026 09:03 AM

அ நிறம் | அளவு
ஆற்றங்கரை ஓரமாக ஆமை ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிரில் முயல் ஒன்று துள்ளிக் குதித்தபடி வந்தது. இதைப் பார்த்த ஆமை, ''நீ மட்டும் துள்ளி விளையாடுறியே'' எனக் கேட்டது.
''உன்னைப் போல் நான் என்ன முதுகில் ஓட்டையா சுமக்கிறேன்' என அலட்சியத்துடன் கேட்டது முயல். இதைச் சொன்னதும் ' என்னை மட்டும் ஏன் இறைவன் தண்டித்தார்'' என வருத்தப்பட்டது.
அந்த நேரத்தில் புதருக்குள் மறைந்திருந்த நரி ஒன்று திடீரென வெளியே வந்தது. உஷாராகி விட்ட ஆமை தலை, கை, கால்களை ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது. ஆனால் முயலால் தப்ப முடியவில்லை. நரியிடம் மாட்டிக் கொண்டது.
அதன் கதி... அதோ கதிதான்.
