ADDED : மே 07, 2026 09:09 AM
அ நிறம் | அளவு
நபிகள் நாயகத்தை சந்தித்த தோழர் ஒருவர், ''சொந்த வீடு கூட எனக்கு இல்லை'' என அழுதார்.
அவரை காபா அருகிலுள்ள ஓரிடத்திற்கு அழைத்து சென்றார். ''இதோ... இங்கு வீடு கட்டிக் கொள்ளுங்கள். நானும் உங்களுக்கு உதவி செய்கிறேன்'' என்றார். கட்டடம் கட்ட நாயகம் மண்ணை குழைத்துக் கொடுத்தார். நான்கு புறமும் சுவர் எழுப்பிய பிறகு, கூரை அமைக்கும் பணி தொடங்கியது. சுவர் மிக உயரமாக இருந்ததால் கூரை அமைக்க முடியவில்லை. உடனே நாயகம், '' தரை மீது நான் அமர்ந்து கொள்கிறேன்; என் தோளின் மீதேறி கூரை அமையுங்கள்'' என்றார்.
அதிர்ச்சி அடைந்த அவர், ''இறைத்துாதரான தங்களின் தோள்களை நான் மிதிக்க மாட்டேன்'' என மறுத்தார்.
''சக மனிதருக்கு உதவுவது நம் கடமை. அதைக் கண்டு இறைவன் மகிழ்வான்'' என்றார்.
