தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/தியாகம்

தியாகம்

தியாகம்


ADDED : மே 14, 2026 12:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 12:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தோழர் அபூதல்ஹாவிடம் பேசிக் கொண்டிருந்தார் நபிகள் நாயகம். அப்போது வறியவர் ஒருவர் அங்கு வந்தார். அவர் சாப்பிட்டு இரண்டு நாளாகி விட்டதை உணர்ந்த நாயகம், ''இவருக்கு உணவு கொடுங்கள்'' என்றார். தோழரும் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று மனைவியிடம், ''விருந்தாளி ஒருவரை அழைத்து வந்துள்ளேன். சாப்பிட என்ன இருக்கிறது'' எனக் கேட்டார்.

அதற்கு அவர், ''நம் குழந்தைகளுக்கு மட்டுமே உணவு இருக்கிறது'' என்றார்.

யோசித்த தோழர், ''குழந்தைகள் சாப்பாடு கேட்டால் பிறகு சமைத்து தருகிறேன்'' என்றார். ஏழை அந்த உணவை சாப்பிட்டு புறப்பட்டார். உணவு இல்லாததால் அன்றிரவு குழந்தைகள் பட்டினியுடன் துாங்கினர். மறுநாள் நாயகத்தை பார்க்கச் சென்றார் தோழர். அவரிடம், '' உம் குழந்தைகளுக்கு கூட கொடுக்காமல் விருந்தினருக்கு உணவு கொடுத்த நல்லவரே. உம்மைப் போல தியாகம் செய்பவருக்கு இறையருள் கிடைக்கும்'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us