ADDED : மே 14, 2026 12:29 PM

அ நிறம் | அளவு
நரகமும் சொர்க்கமும் தங்களுக்குள் பேசிக் கொண்டன. 'அக்கிரமம் செய்பவர்கள், ஆணவம் கொண்டவர்கள் என்னிடம் வருகிறார்கள்' என்றது நரகம். 'நல்லவர்களும் ஏழைகளும் என்னிடம் வருகிறார்கள்' என்றது சொர்க்கம்.
அப்போது இறைவன், '' நரகமே... நீ வேதனையின் அடையாளம். உன்னிடம் வருபவர்களுக்கு வேதனையைக் கொடுக்கிறேன்' என்றும், சொர்க்கத்திடம், 'நீயே என்னுடைய பேரருள். அதனால் சொர்க்கவாசிகளுக்கு அருளை வழங்குகிறேன்' என்றான். சொர்க்கம், நரகத்தை நிரப்பும் விதத்தில் மாறுபட்ட குணத்துடன் மக்கள் பூமியில் வாழ்கிறார்கள்'' எனச் சொன்னான்.
