ADDED : மே 14, 2026 12:34 PM

அ நிறம் | அளவு
ஒருமுறை நபிகள் நாயகம், 'கடனில் இருந்து பாதுகாப்பு தேடுகிறேன்' என தொழுகையில் துஆ செய்து கொண்டிருந்தார்.
அப்போது தோழர் ஒருவர், ''துாதரே... கடனில் இருந்து பாதுகாவல் தேடுகிறீர்களே... ஏன்'' எனக் கேட்டார். ''கடன்பட்டு விட்டால் பொய் பேசவும், கொடுத்த வாக்குறுதியை மீறவும் வேண்டியிருக்கும். அதில் இருந்து விடுபடவே இப்படி தொழுகை செய்கிறேன். கடன் இல்லாத வாழ்வு நிம்மதியானது. கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டால் கீழ்க்கண்டவற்றை பின்பற்றுவது அவசியம்.
* செலவில் சிக்கனம் அவசியம்
* ஆடம்பர எண்ணம் ஆபத்தில் தள்ளி விடும்.
* பணவிஷயத்தில் சொன்ன வாக்கை காப்பாற்றுங்கள்.
* அத்தியாவசிய தேவைக்கு மட்டும் கடன் வாங்குங்கள்.
