ADDED : மே 20, 2026 10:54 AM

அ நிறம் | அளவு
சூரியன், சந்திரனைப் பற்றி அறிஞர்கள் இடையே விவாதம் நடந்தது. அதில் ஒருவர், ''சூரியனால் தான் வெப்பம், ஒளி கிடைக்கிறது. சூரியனால் தான் சந்திரனும் ஒளி பெறுகிறது. எனவே சூரியன் தான் முக்கியமானது'' என்றார்.
மற்றொருவரோ, ''இல்லை. நாள் முழுவதும் சூரியனே இருந்தால் நிலைமை என்னாகும்? சந்திரன் இருக்கும் இரவில் தான் எல்லா உயிர்களும் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெறுகின்றன. அதனால் சந்திரனே முக்கியம்'' என்றார்.
அங்கிருந்த முதியவர் ஒருவர், ''நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் அதிகாரி இறைவன் மட்டுமே. அவன் வானங்களைத் துாண்கள் இல்லாமலே உயர்த்தியுள்ளான்; அவனே சூரியன், சந்திரனை தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறான்; இவை அவனுடைய காலத்திட்டப்படியே செயல்படுகின்றன; அவனால் படைக்கப்பட்ட எல்லாம் முக்கியமானதே'' என்றார்.
